வந்தவாசி, அக் 7: வந்தவாசியில் கடனாளிகளால் வீடியோ காலில் மிரட்டப்பட்ட வியாபாரி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் பெரிய மசூதி தெருவை சேர்ந்தவர் ேஷக்சையத்அலி(32), பழைய இரும்பு வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் மனைவி மற்றும் உறவினர்கள் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை.
பின்னர் அவரது செல்போனுக்கு அவரது சித்தப்பா ஜாக்கீர் உசேன் ெதாடர்பு கொண்டதற்கு செல்ேபான் வீடியோ காலில் ஆபாசமாக பேசி கடனாளிகள் பணம் கேட்டு என்னை மிரட்டுகின்றனர். என்னை தேடாதீர்கள் எனக்கூறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்தாராம். இதுகுறித்து அவரது தந்தை நைனாமுகமது நேற்று வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கடனாளிகள் கடத்தினார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து தேடி வருகின்றனர்.
The post வீடியோ காலில் மிரட்டப்பட்ட வியாபாரி கடத்தலா? போலீசார் விசாரணை வந்தவாசியில் கடனாளிகளால் appeared first on Dinakaran.