கலசபாக்கம், அக். 5: திருக்கோயில்களில் வரும் 21ம் தேதி ₹60 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை பொருட்களுடன் திருக்கோயில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இதில் பயன்பெறுமாறு செயல் அலுவலர் வசந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலைத்துறை மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில்களில் திருமணம் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி வரும் 21ம் தேதி திட்டத்தின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தபடி ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ₹60, ஆயிரம் செலவில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இத்திட்டத்தின் மூலம் பதிவு செய்து பயனடையலாம்.
இதுகுறித்து செயல் அலுவலர் வசந்தி கூறியதாவது: வரும் 21 ம் தேதி எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் உள்ள சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற உள்ளது. இதில் பயன்பெற விரும்புபவர்கள் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம். ஆதார் அட்டை முதல் திருமணச் சான்று போட்டோ சாதி சான்றிதழ் அல்லது கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்றார்.
The post ₹60 ஆயிரம் சீர்வரிசை பொருட்களுடன் கோயிலில் திருமணம் செயல் அலுவலர் தகவல் திருக்கோயில்களில் 21ம் தேதி appeared first on Dinakaran.