×

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் பலி.! 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

லக்னோ: மிர்சாபூரில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில் கட்டுமான பணியை முடித்துவிட்டு தொழிலாளர்கள் 13 பேர் டிராக்டர் டிராலியில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அந்த டிராக்டர் டிராலி மிர்சாபூர்-வாரணாசி எல்லையில் உள்ள கச்சவான் மற்றும் மிர்சாமுராத் பகுதிக்கு இடையே ஜிடி சாலையில் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் டிராலியில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து இன்று அதிகாலை 1 மணியளவில் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் பலி.! 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Mirzapur ,Lucknow ,Patohi district ,Varanasi ,Mirzapur, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED மதுரவாயிலில் கல்லூரி பேராசிரியர்...