×

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 400 கனஅடியானது

ஓசூர், அக்.4: ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு, கர்நாடக மாநிலம் தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைந்ததால், கெலவரப்பள்ளி அணைக்கான நீர் வரத்தும் படிப்படியாக குறைந்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீர் அப்படியே தென்பெண்ணையில் வெளியேற்றப்பட்டது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 41.66 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

The post கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 400 கனஅடியானது appeared first on Dinakaran.

Tags : Kelavarapalli dam ,Hosur ,Hosur, Karnataka ,Tenpenna ,Dinakaran ,
× RELATED வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் பலி