- தூத்துக்குடி துறைமுக ஆணையம்
- மதுரை
- தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம்
- தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம்
- மத்திய அமைச்சர்
- தின மலர்
மதுரை: தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம், சட்ட அலுவலர் தகுதி 1, உதவி செயல் பொறியாளர்கள் மெக்கானிக்கல், சிவில் ஆகிய பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் நடத்தியது. துறைமுகத்தின் முதல் நிலை அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக, எழுத்து தேர்வு, நேர்காணல்கள் ஆகிய தேர்வு நடைமுறைகள் முடிந்த நிலையில், ேதர்வு எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்ச்சி முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்வு முறைகளில் கேள்விகளையும் எழுப்பி உள்ளதாகவும், தேர்வு முடிவுகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தக்கோரியும், ஒன்றிய துறைமுகங்கள் துறை இணை அமைச்சர் சாந்தனு தாகூருக்கு, மதுரை எம்பி கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்வு முடிவுகள் குறித்து, மேல்மட்ட விசாரணை நடத்தி அதன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
The post தூத்துக்குடி துறைமுக ஆணைய தேர்வில் ஒருவர் கூட வெற்றி பெறாதது குறித்து உயர்மட்ட விசாரணை: ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம் appeared first on Dinakaran.