- ராஜேஷ் லகானி
- பிரதீப் யாதவ்
- துணை முதலமைச்சர்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு உயர் கல்வித் துறை
- உதயநிதி ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதில் தமிழக உயர்கல்வி துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வி துறை செயலாளராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மின்வாரிய தலைவராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
பெயர் தற்போதைய பதவி புதிய பதவி
கே.கோபால் கால்நடை, பால்வளம் மற்றும்
மீன்வளத்துறை செயலாளர் உயர் கல்வித்துறை செயலாளர்
பிரதீப் யாதவ் உயர் கல்வித்துறை செயலாளர் துணை முதல்வரின் செயலாளர்
ராஜேஷ் லக்கானி தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக
தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர்
இ.சுந்தரவள்ளி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையர் கல்லூரி கல்வித்துறை இயக்குனர்
பி.விஷ்ணு சந்திரன் பொதுத்துறை இணை செயலாளர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனர்
வி.அமுதவல்லி சமூகநலத்துறை ஆணையர் கைத்தறி, கைவினை பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளர்
ஆர்.லில்லி அரசு போக்குவரத்து சிறப்பு செயலாளர் சமூகநலத்துறை ஆணையர்
ஆர்.லலிதா சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர்
(வருவாய் மற்றும் நிதி) ஜவுளித்துறை இயக்குனர்
பவன்குமார் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பொதுத்துறை துணை செயலாளர்
சத்யபிரதா சாகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூடுதல் பொறுப்பாக கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர்
சி.விஜயகுமார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கூடுதல் பொறுப்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர்
கே.நந்தகுமார் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்
தர்மேந்திர பிரதாப் யாதவ் கைத்தறி, கைவினை பொருட்கள்,
ஜவுளி மற்றும் காதி துறை செயலாளர் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் தலைவர்
எஸ்.சுவர்ணா தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி
கழகத்தின் தலைவர் ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) மாநில திட்ட இயக்குனர்
எம்.பிரித்விராஜ் நிதித்துறை துணை செயலாளர் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி)
ஜெ.ஜெயகாந்தன் மதுவிலக்கு மற்றும் கலால் வரி
முன்னாள் ஆணையர் தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமையின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்
The post ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: துணை முதல்வரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் appeared first on Dinakaran.