- அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- சென்னை
- தமிழ்நாட்டுப் பள்ளி
- கல்வி
- அன்பில் மகேஷ் பொய்யாமொழி
- வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்தரமேரூர்
- காஞ்சிபுரம் மாவட்டம்
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள் குறித்து கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வுகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் அவர் இன்று காலை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
The post உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.