- நெடுஞ்சாலைகள் துறை
- காங்கேயம்
- கங்யம்
- முதல் அமைச்சர்
- சென்னிமலை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சாலைகள் துறை
- கங்கையாமா
காங்கயம்: சென்னிமலை முதல் காங்கயம் வரையுள்ள சாலையில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.37 கோடி மதிப்பீட்டில் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பருவநிலை தொடங்க உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் அறிவுரையின் படியும் திருப்பூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு கோட்டம் ஆகியோரின் அறிவுரையின் படியும், காங்கயம் உட்கோட்டத்தின் சார்பாக வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பேரிடர்களை உடனுக்குடன் எதிர் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள், மரம் வெட்டும் இயந்திரங்கள், ஜெனரேட்டர், சாலை மைய தடுப்பான்கள், சிறு தளவாடங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் ஆகியவை காங்கயம் பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
The post காங்கயத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பருவநிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் appeared first on Dinakaran.