- முதல் அமைச்சர்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- விழுப்புரம் மாவட்ட மத்திய புலனாய்வு பிரிவு போலீசார்
- இன்ஸ்பெக்டர்
- சின்னகாமணன்
- விழுப்புரம்
- தாலுக்கா
சென்னை: மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சின்னகாமனன், விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய தலைமை காவலர் மகாமார்க்ஸ்,
திருச்சி மாவட்டம் துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் கார்த்திக், சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் சிவா மற்றும் பூமாலை ஆகியோருக்கு 2024ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்விருது, முதலமைச்சரால் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத் தொகையாக ரூ.40,000 ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.