ெகாழும்பு: கொரோனாக்கு பிறகு இலங்கையின் சுற்றுலாத்துறை அதளபாதாளத்திற்கு சென்ற நிலையில், படிபடியாக மீண்டு வருகிறது. இலங்கைக்கு வரும் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இன்று முதல் விசா தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் அடங்கும். விசா இல்லாமல் இந்த 35 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அடுத்த 6 மாதங்களுக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்றும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களில் 20 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இலங்கை அரசின் புதிய விசா கொள்கையால் சுற்றுலாவிற்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் அறிவிப்பின்படி, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மட்டுமின்றி நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், ப்ரான்ஸ், கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், சுவீடன், தென் கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் மற்றும் நியூசிலாந்து நாட்டினரும் விசா இல்லாமல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
The post இந்தியா உட்பட 35 நாட்டு மக்கள் இலங்கைக்கு செல்ல ‘விசா’ தேவையில்லை: 6 மாதங்களுக்கு சிறப்பு திட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.