- முல்லைப் பெரியார்
- அணை
- அமைச்சர்
- Duraimurugan
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- முதல் அமைச்சர்
- முல்லை பெரியார் அணை
சென்னை: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முதலமைச்சர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேபி அணையை பலப்படுத்திய பிறகு முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு ஒத்துழைக்க அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை முதல்வர் கேட்டுக்கொண்டார். முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அரசுக்கு உத்தரவிடுமாறு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் 2021 நவ.27, 2022 நவ.14, 2023 ஆக.7 ஆகிய தேதிகளில் பல மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
The post முல்லைப் பெரியாறு அணை: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.