×

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்


புதுடெல்லி: கேரள மாநிலத்தை சேர்ந்த மேத்யூ நெடும்பாரா என்பவர் உட்பட மொத்தம் ஐந்து வழக்கறிஞர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,\\” கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட பேரிடரை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் ஒருசில உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அதாவது முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் பெரும் ஆபத்து ஏற்படும். சுமார் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த அணை 50 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது 129 ஆண்டுகள் பழமையாகிவிட்டது.

இது அதன் ஆயுட்காலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்கள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டு விடும். அணையின் நீர் மட்டத்தை அதிகரிக்க பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். மேலும் மக்களை பாதுகாக்கும் விதமாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Mathew Nedumbara ,Kerala ,Wayanad, Kerala ,Dinakaran ,
× RELATED ஜாபர் சேட் விவகாரத்தில் முடித்து...