×

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது

புதுச்சேரி: புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம். அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்திய திரைப்பட விழா வரும் 4ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடக்கிறது. அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் 4ம் தேதி மாலை 6 மணிக்கு முதல்வர் ரங்கசாமி விழாவை தொடங்கி வைத்து, 2022க்கான புதுச்சேரி அரசின் சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள `குரங்கு பெடல்’ திரைப்படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் ரூ.1 லட்சம் பரிசை வழங்குகிறார். இதனை திரைப்பட இயக்குனர் கமலக்கண்ணன் பெறுகிறார். தொடர்ந்து, குரங்கு பெடல் திரைப்படம் திரையிடப்படுகிறது. 5ம் தேதி ஆர்ஆர்ஆர் (தெலுங்கு),6ம் தேதி அறியிப்பு (மலையாளம்) , 7ம் தேதி டோனிக் (வங்காளம்) திரைப்படமும், 8ம் தேதி மேஜர் (இந்தி) திரைப்படமும் திரையிடப்படுகிறது. இப்படங்களை இலவசமாக பார்வையிடலாம்.

The post புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Puduwai Government ,Puducherry ,Puducherry Government Department of Information and Publicity ,Navadarshan Film Corporation ,Indian Film Festival ,Alliance France ,Alliance Française Theater ,Puduvai government ,
× RELATED புதுச்சேரியில் சபாநாயகர் மீதான...