×

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ராஜபாளையம், அக்.1: ராஜபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் தூய்மையே சேவை என்ற திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நகர்நல அலுவலர் டாக்டர் பரிதா வாணி தலைமை வகித்தார்.

இம்முகாமில் பொது மருத்துவர், தோல் நோய் சிறப்பு மருத்துவர், நுரையீரல் சிறப்பு மருத்துவர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், ஆயுர்வேத சிறப்பு மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆகிய மருத்துவ குழுக்கள் கலந்து கொண்டனர். மேலும் இம்முகாமில் சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 350 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

The post ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Medical Camp for Rajapalayam Municipal Sanitation Workers ,Rajapalayam ,Rajapalayam Municipal Office Complex ,Urban Welfare Officer ,Dr. ,Paritha Vani ,Dinakaran ,
× RELATED பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்