×

தாமரைக்குப்பம் கால்வாய் மதகு சீரமைக்கும் பணி தொடக்கம்

 

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, தாமரைக்குப்பம் பகுதியில் கால்வாய் மதகை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு பூண்டி ஏரி நிரம்பியதும் மீதமுள்ள தண்ணீரை தாமரைக்குப்பம் பகுதியில் இருந்து மதகு வழியாக கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடுவார்கள்.

இந்நிலையில், மழை காலம் தொடங்க இருப்பதால் நீர்வளத்துறை அதிகாரிகள் தாமரைக்குப்பம் கிருஷ்ணா கால்வாயில் இருந்து கண்ணன் கோட்டை ஏரிக்கு செல்லும் கால்வாயின் மதகை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் செஞ்சியகரம் பகுதியில் கால்வாயின் இருபுறமும் சேதமடைந்து தண்ணீர் செல்லமுடியாமல் உள்ளதால் அதையும் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தாமரைக்குப்பம் கால்வாய் மதகு சீரமைக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamaraikuppam ,Uthukkottai ,Andhra ,Kandaleru dam ,Bundi lake ,Thamaraikuppam ,Kannan ,
× RELATED பெரியபாளையம் பஸ் நிலையம் விரிவாக்கம்...