×

பகுஜன் சமாஜ் கட்சி புகாரை ஏற்க மறுப்பு; விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் புதிய அனுமதி

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி புகாரை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், நடிகர் விஜய் கட்சி யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க மறுத்து விட்டது. நடிகர் விஜய், தனது புதிய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்து அதனை அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் கொடியையும் அறிமுகம் செய்தார். அந்தக் கொடியில் 2 யானைகள் இருக்கின்றன. யானை, பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாகும். இதனால் நடிகர் விஜய், தங்களது கட்சியின் சின்னத்தை, கொடியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில், பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு அளித்தது. ஆனால் இந்தப் புகார் மனுவை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், விஜய் கட்சி யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சிக்கு பதில் அனுப்பியுள்ளது. இதன் மூலம் விஜய், தனது கொடியில் யானைச் சின்னத்தை பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

The post பகுஜன் சமாஜ் கட்சி புகாரை ஏற்க மறுப்பு; விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் புதிய அனுமதி appeared first on Dinakaran.

Tags : BAGJAN SAMAJ PARTY ,ELECTORAL COMMISSION ,VIJAY PARTY ,Chennai ,Election Commission ,Bagajan Samaj party ,Vijay ,Tamil Nadu Victory Club ,Dinakaran ,
× RELATED அதிமுகவின் இரட்டை இலை சின்னம்...