* சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அடங்கில் இந்தியா-யு19 அணியுடன் நடக்கும் முதல் டெஸ்டில் (4 நாள் போட்டி), டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா-யு19 அணி முதல் இன்னிஸ்சில் 293 ரன் குவித்து ஆல் அவுட்டானது (71.4 ஓவர்). கிங்செல் 53, பீகே 29, கிறிஸ்டியன் ஹோவ் 48, ஓ கானார் 61, தாமஸ் பிரவுன் 21 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா-யு19 முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 103 ரன் எடுத்துள்ளது (14 ஓவர்). விகான் மல்கோத்ரா 21 ரன், வைபவ் சூர்யவன்ஷி 81 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
* வங்கதேசத்துடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா: பவுமா (கேப்டன்), பெடிங்காம், பிரீட்ஸ்கே, பர்கர், ஸோர்சி, மகராஜ், மார்க்ரம், முல்டர், முத்துசாமி, பேட்டர்சன், டேன் பியட், ரபாடா, ஸ்டப்ஸ், ரிக்கெல்டன், கைல் வெர்ரைன்.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.