×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; அம்பத்தூர் 7வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள்

அண்ணாநகர்: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பத்தூர் 7வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் குடிநீர் வாரிய சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அம்பத்தூர் 7வது மண்டல பகுதிக்கு உட்பட்ட முகப்பேர், நொளம்பூர், ஜேஜே.நகர், கொரட்டூர், அம்பத்தூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளில் தூர்வாரும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடிநீர் வாரிய 7வது மண்டல பகுதி பொறியாளர் தேவி நேரில் ஆய்வு செய்து தூர்வாரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அந்த பகுதி மக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஏதேனும் குறைகள் உள்ளதா? என்றும் கேட்டறிந்தார்.

இதுகுறித்து குடிநீர்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,‘‘அம்பத்தூர் 7வது மண்டலத்துக்கு உட்பட்ட திருமங்கலம், முகப்பேர், நொளம்பூர், ஜெ.ஜெ நகர், கொரட்டூர் பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கையாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. பருவமழை முன்னெச்சரிக்கையாக குடிநீர் வாரிய ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் பிரச்னை ஏதும் உள்ளதா? என்று கேட்டறிந்து வருகின்றனர். பருவமழை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழையை சமாளிக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் தயாராக உள்ளனர்’ என்றனர்.

 

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; அம்பத்தூர் 7வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Ambattur 7th Zone ,Annanagar ,Drinking Water Board ,Chennai ,North East Monsoon ,Ambattur ,7th zone ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் தூய்மை பணி மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனம் தேர்வு