×

ஆப்பிள் நிறுவனத்தின் நன்னடத்தை சோதனையில் ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலை: நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற அந்நிறுவனம் முடிவு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலை தொழிலார்கள் போராட்டத்தின் எதிரொலியாக நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. அங்கு பணியாற்றும் பெண் தொழிலாளர்களை தங்கவைக்கப்பட்டிருந்த விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் 150க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெரும் போராட்டம் வெடித்ததால் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை  மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆலை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் நிலையில் பாக்ஸ்கான் ஆலை தற்போது தங்களின் நன்னடத்தை சோதனையில் இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. இதனால் மறுஅறிவிப்பு வரும் வரையில் ஆலை திறக்க வாய்ப்பில்லாத நிலையில் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படும் என்று பாக்ஸ்கான் அறிவித்துள்ளது. மேலும் ஸ்ரீபெரும்புதூர் ஆலை நிர்வாகத்தை கூண்டோடு மாற்றவும் பாக்ஸ்கான் முடிவெடுத்துள்ளது. 15,000 தொழிலார்களுடன் இயங்கி வந்த பாக்ஸ்கான் ஆலை கடந்த 18-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இதேபோல கடந்த ஆண்டு டிசம்பரில் பெங்களூருவில் ஐபோன் தயாரில் ஈடுபடும் விஸ்திரான் ஆலை ஊதிய பிரச்சனையால் அடித்து நொறுக்கப்பட்டது. பின்னர் 3 மாதங்கள் கழித்தே அந்த ஆலை திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. …

The post ஆப்பிள் நிறுவனத்தின் நன்னடத்தை சோதனையில் ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலை: நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற அந்நிறுவனம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Sriparuthur Paxcon plant ,Apple ,Sriperumthur ,Sriperudur Foxconn plant ,Chennai ,Sriparudur Paxcon plant ,Apple Company ,Dinakaran ,
× RELATED சைனீஸ் காளான் சூப்