×

குற்றாலத்தில் நடிகைகள் குதூகலம்

நடிகைகள் என்றால் கீரியும், பாம்பும் போல் எதிரிகளாக இருப்பார்கள் என்ற வழக்கம் மாறி வருகிறது. தற்போதுள்ள பல நடிகைகள் ஈகோ இல்லாமல் பழகுகின்றனர். அவர்களில் கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் ஆகியோரும் அடங்குவர். நெருங்கிய தோழிகளான இருவரும் குற்றாலம் அருகே படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நிலையில், ஓட்டல் ஒன்றில் தோசை சாப்பிடும் போட்டோவை பதிவு செய்துள்ளனர். தனுஷ் நடிக்கும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக குற்றாலம் சென்றுள்ளார், பிரியங்கா மோகன்.

அதுபோல், ’ரகு தாத்தா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக குற்றாலத்தில் தங்கியிருக்கிறார், கீர்த்தி சுரேஷ். சில நாட்களுக்கு முன்பு அவர்கள், திடீரென்று ஒரு ஓட்டலுக்குச் சென்று தோசை ஆர்டர் செய்தனர். அங்கேயே டேபிளில் அமர்ந்து அவர்கள் ருசித்து ரசித்துச் சாப்பிட்டு மகிழ்ந்த காட்சியை போட்டோ எடுத்து, தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது ’மாமன்னன்’, ’ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘சைரன்’, தெலுங்கில் ‘போலா சங்கர்’ ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

The post குற்றாலத்தில் நடிகைகள் குதூகலம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Keerthy Suresh ,Priyanka Mohan ,Courtalam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி