×
Saravana Stores

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்த்தல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும்

புதுக்கோட்டை,செப்.29: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கும், கழக தோழர்களுக்கும், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அறிவுறுத்தலின்படி, இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற 1.1.2025 தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் 29-10-2024 அன்று வெளியிட உள்ளது. புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திலுள்ள திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும், 29.10.2024 முதல் 28.11.2024 வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும் திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர தலைமை தேர்தல் அதிகாரி அறிவிக்கும் சனி, ஞாயிறு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.அதன்படி, இந்த நாட்களில் வாக்காளரே தாமாக முன் வந்து வாக்காளர்கள் பட்டியலில் உள்ள தங்களது விவரங்களை சரிபார்த்து, விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1.1.2025 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் கொடுக்க வேண்டும்.

இதனடிப்படையில் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும். புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும். தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6-லும், பெயர் நீக்கம் செய்திட படிவம் 7-லும், வாக்காளர் விபரங்களில் உள்ள தவறுகளை திருத்தம் செய்திட ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் திருத்தம், முகவரி மாற்றம், நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற (Replacement id Card) படிவம் 6-லும், அயல்நாடு வாழ் வாக்காளர் சேர்க்க (NRI Voters) படிவம் 6ஏ. ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க படிவம் 6 பி. விண்ணப்பம் பூர்த்தி செய்து அளித்திட வேண்டும்.

மேலும் வாக்கு சேர்ப்பதற்கு www.nvsp.in < http://www.nvsp.in/ >. மற்றும் www.voterpertal.eci.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் இடம் மாறி வந்து வாக்காளர்களாக சேர்க்க விரும்புபவர்களும், பெயர் சேர்த்துக் கொள்ள வேண்டிய விண்ணப்பப் படிவமான படிவம்-62 முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும். குறிப்பாக படிவம்-6ன் கலம் IV-ல் மனுதாரரது முந்தைய முகவரியினை தவறாது எழுதிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் 29.10.2024 ஆகும்.

பெயர்களைச் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு மனு கொடுக்க கால அவகாசம் 29.10.2024 முதல் 28.11.2024 வரை. சிறப்பு முகாம் நடத்தப்படும் நாட்கள் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிக்கும் சனி. ஞாயிறு நாட்கள். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள் 6.1.2025. இந்த நாட்களில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு பணியிலும், சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களிலும், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர். வட்ட, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு. பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னா இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். முன்னாள், இந்நாள் ஊராட்சி ஒன்றிய குழுதலைவர்கள், துணைத் தலைவர்கள், நகரமன்ற தலைவர்கள். பேரூராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள். மாவட்ட, ஒன்றியகுழு உறுப்பினர்கள், மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முந்நாள், இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் (BLA2). பூத் கமிட்டி உறுப்பினர்கள் (BLC) மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் கழக தோழர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த பணியின் விவரத்திளை மாவட்டக் கழகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பு: வாக்காளர் சேர்க்கும் பணியின்போது நமது கழகத்தின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள BLA2 க்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் (BLC) இந்த பணியினை முழுமையாக இருந்து 2026 சட்டமன்ற தேர்தல் வரை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள BLO உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்த்தல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Pudukottai South District DMK ,District Secretary Minister ,Raghupathi ,
× RELATED பயிர் பாதுகாப்பிற்குப் பூச்சி கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேண்டும்