விளாத்திகுளம், நவ.17: விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ திடீர் ஆய்வு செய்தார். விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் மூலம் சுமார் 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், பள்ளி கட்டிடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் கிராமங்களில் சாலைகளில் இருபுறங்களிலும் வளர்ந்து வரும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் பிடிஓக்கள் னிவாசன், தங்கவேல், புதூர் பிடிஓக்கள் வெங்கடாசலம், அரவிந்த், மரங்கள் மக்கள் இயக்கம் நிர்வாக இயக்குனர் ராகவன், விளாத்திகுளம் ஒன்றிய திமுக செயலாளர்கள் மேற்கு அன்புராஜன், கிழக்கு சின்னமாரிமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இமானுவேல் உட்பட அலுவலக பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் appeared first on Dinakaran.