- பெரிய ஏரி
- பென்னாதுர்
- கல்பென்நேச்சுர்
- கிரேட்
- ஏரி
- கீழ் பென்னாட்டரின் கருப்பு அதிர்ஷ்டம்
- பென்னாட்டூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நில
- திருவண்ணாமலை மாவட்டம்
- பிளாக் லகூன்
கீழ்பென்னாத்தூர், செப். 29: கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் பெரிய ஏரியில் வெள்ளத்தில் அடித்து சென்றவர்களை மீட்பது போல் தத்ரூபமாக தீயணைப்பு படையினர் செயல் விளக்கம் காணப்பித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய மாவட்ட அலுவலர் உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழை முன்னிட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது என்று ஒத்திகை பயிற்சி நடந்தது. கீழ்பென்னாத்தூர் நிலைய அலுவலர் தா.பாலமுருகன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ச.சரளா முன்னிலை வகித்தார். கீழ்பென்னாத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் கருங்காலிகுப்பம் பெரிய ஏரியில் வெள்ளத்தில் அடித்துச்செல்லபட்டவர்களையும், சிக்கியவர்களையும் எப்படி காப்பாற்றுவது என்று தத்ரூபமாக ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கீழ்பென்னாத்தூர் காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன் கலந்துகொண்டு ஒத்திகை நிகழ்ச்சியினை பார்வையிட்டார்.
கருங்காலிகுப்பம் பெரியஏரியில் நடைபெற்ற ஒத்திகை பயிற்சியில் பொதுமக்கள் மழைக்காலங்களில் ஏரி, குளம் உள்ளிட்ட பகுதிகளிலும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிலிருந்து எப்படி வெளியேறுவது, பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஏரி, குளம் உள்ள நீரில் மூழ்கியவர்களை மீட்பது குறித்தும் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் கீழ்பென்னாத்தூர் வருவாய்த்துறை, பேரூராட்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை, காவல்துறை, வட்டார வளர்ச்சி துறை, கல்விதுறையினர் மற்றும் பணியாளர்கள் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.
The post வெள்ளத்தில் அடித்து சென்றவர்களை காப்பாற்றிய தீயணைப்பு மீட்பு படையினர் தத்ரூபமாக செயல் விளக்கம் காண்பித்தனர் கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் பெரிய ஏரியில் appeared first on Dinakaran.