×
Saravana Stores

விஷ சாராய விவகாரம் மேலும் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது இதுவரை 16 பேர் கைது

கள்ளக்குறிச்சி, செப். 29: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிகிச்சையில் குணமடைந்து 161 பேர் நலமுடன் வீடு திரும்பினர். இந்த வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 24 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட கள்ளக்குறிச்சி அடுத்த சு.பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோதண்டம் மகன் கண்ணன்(40) என்பவரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டி சென்னை சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம் பரிந்துரையின் பேரில், கண்ணனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை 16 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post விஷ சாராய விவகாரம் மேலும் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது இதுவரை 16 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kalakurichi ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி