×
Saravana Stores

பணம் கேட்டு தாக்கிய மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது

 

வேப்பூர், நவ. 8: பணம் கேட்டு தாக்கிய மகனை, கத்தியால் தந்தை குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(70). இவரது மகன் முத்துசாமி(47). இவருக்கு 2 மனைவிகள், 4 பிள்ளைகள் உள்ளனர். இதில் முத்துசாமியுடன், அவரது தந்தை ஆறுமுகம் வசித்து வருகிறார். தனது தந்தை ஆறுமுகத்திடம் அடிக்கடி பணம் கேட்டு முத்துசாமி தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் முத்துசாமி, ஆறுமுகத்திடம் ஆடு விற்ற பணத்தை கேட்டு அவரை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தவிர்க்க ஆறுமுகம் தனது வீட்டில் இருந்த ஆடு உரிக்கும் கத்தியுடன் வீட்டை விட்டு வெளியே சென்று மரத்தடியில் உட்கார்ந்துள்ளார். இதையடுத்து முத்துச்சாமியும் மரத்தடிக்கு சென்று ஆறுமுகத்திடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், தான் வைத்திருந்த கத்தியால் மகன் முத்துசாமியை குத்தியுள்ளார். இதில் முத்துசாமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து அலறி துடித்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பணம் கேட்டு தாக்கிய மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Veypur ,Arumugam ,Pasar village ,Cuddalore district ,Muthuswamy ,
× RELATED வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாததால் ஏஜென்ட் தற்கொலை