- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- டாடா குழு
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- சந்திரசேகரன்
- டாடா மோட்டார்ஸ்
- சிப்காட், ராணிப்பேட்டை மாவட்டம்
- எம். ஸ்டால்
- தின மலர்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவை முன்னிட்டு, டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரனை இன்று (நேற்று) விருந்தோம்பும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன். இச்சந்திப்பின்போது, டாடா குழுமம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அன்போடு கோரிக்கை விடுத்தேன். சந்திரசேகரன், கடந்த மூன்று ஆண்டுகளில், டாடா குழுமம் தமிழ்நாட்டில் தங்களது திட்டங்களை பெருமளவில் விரிவாக்கம் செய்ததை குறிப்பிட்டு பேசியதையும், திராவிட மாடல் அரசின் வேகத்தையும், எளிதில் அணுகக் கூடிய தன்மையையும், விரைவான இயக்கத்தையும் அங்கீகரித்ததையும் மிகவும் பாராட்டுகிறேன்.நாங்கள் தொடர்ந்து இதேபோல டாடா குழும நிறுவனங்களின் தேவைகளுக்கு உடனடியாக, முழுமையாக செவி மடுப்பதோடு, எங்கள் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு எல்லா வழியிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இணைந்து பணிபுரிவோம் என அவருக்கு உறுதியளிக்கிறேன். இன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம் வெற்றியடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்காக நன்றியையும் உரித்தாக்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post இளைஞர்கள், பெண்களுக்கு எல்லா வழியிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இணைந்து பணிபுரிவோம்: டாடா குழும தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.