×

இந்திய அளவில் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கம் திமுக: திருமாவளவன் பேச்சு

சென்னை: காஞ்சிபுரம் திமுக பவள விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: விசிக திராவிட இயக்கத்தின் மூன்றாவது குழல். திராவிட சமுகநீதியின் அரசியலில் மூன்றாவது குழலாக நிற்கிறேன். இந்திய அளவில் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் வழிகாட்டு இயக்கம் திமுக. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை இதுவரை எந்த மாநில முதல்வரும் கூறியது இல்லை, அதை வலியுறுத்துவது திமுகதான். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் 50 ஆண்டுகாலம் கலைஞரை சுற்றியே அரசியல் இருந்தது. இந்திய அளவில் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கம் திமுக. திராவிட பாரம்பரியத்தில் இருப்பதால்தான் திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரகடனப்படுத்துகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுமையால் தான் திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது. பெரியாருடன் தாளமுத்து, நடராசன் இருக்கும் சிலையை எழுப்ப வேண்டும். தொடர்ந்து திமுகவுடன் இணைந்து சனாதன சக்திகளுக்கு எதிராக முழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்திய அளவில் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கம் திமுக: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Thirumavalavan ,CHENNAI ,Kanchipuram DMK Coral Festival ,Vishik ,India ,
× RELATED புதிய அணியில் சேர விசிகவிற்கு...