×

விண்ணும், மண்ணும் இருக்கும்வரை திமுக நிலைத்திருக்கும் தமிழ்மொழியை அழிப்போம் என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்: வைகோ ஆவேசம்

சென்னை: காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: திமுகவை அழித்தால் எல்லாம் அழிந்துபோகும் என்று மனப்பால் குடித்து இந்துத்துவா சக்திகளும், சனாதன சக்திகளும் திட்டம் தீட்டுகிறார்கள். திமுகவை அழிக்க துடிக்கின்றனவர்களின் வெற்று கூச்சல் வேங்கைகளும், சிங்கங்களும் உளவுகின்ற கானகத்தில் ஊளைச்சத்தம் எழுப்புகின்ற குள்ளநரிகளின் வேலையாகும். விண்ணும், மண்ணும் இருக்கும்வரை திமுக நிலைத்திருக்கும். வடமாநிலத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது, இந்தியா என்று யாரும் சொல்லக்கூடாது, பாரத் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்கள். அதற்கு பிறகு முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஓட்டுரிமை கிடையாது.

இனி டெல்லி தலைநகர் அல்ல, வாரணாசிதான் தலைநகர். நரேந்திரடி மோடி அவர்களே, நீங்கள் சரித்திரத்தை ஓரளவு படித்திருக்கிறீர்கள். அவர், என்ன திட்டமிடுகிறார், திராவிட நாடு என்றபோது திமுகவை அழிக்க வேண்டும் என்கிறார். ஒரே மொழி ஒரே நாடு என்கிறார். இது உலகத்தில் எங்கும் வெற்றிபெறவில்லை. மொழியை அழிப்போம் என்றால் எதிர்ப்போம். உங்களது எந்த ஆட்சி தமிழ்நாட்டுக்கு வந்தது. ஒரே மொழி ஒரே நாடு என்று இங்கே இந்தியை திணித்தால் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம். வெல்லட்டும் திமுக வெல்லட்டும். வாழ்க பெரியார், அண்ணா, கலைஞர் புகழ். இவ்வாறு அவர் பேசினார்.

The post விண்ணும், மண்ணும் இருக்கும்வரை திமுக நிலைத்திருக்கும் தமிழ்மொழியை அழிப்போம் என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்: வைகோ ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Secretary General ,Wiko ,Dimuka Coral Festival General Meeting ,Kanjipura ,Sanatana ,Dimuka ,Dhimuka ,Wiko Obsession ,
× RELATED நீதிமன்ற வாயிலில் நடந்த கொலையை...