×

இங்கு மிருகங்கள் வாழும் இடம்

பைன்ஜான் பிக்சர்ஸ் சார்பில் ஜே.அஜரா பேகம் தயாரிக்கும் படம், ‘இங்கு மிருகங்கள் வாழும் இடம்’. பெண்களுக்கு எதிராக பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. பைன்ஜான், அஸ்மிதா, ஸ்ரீதேவி உன்னி கிருஷ்ணன், சேரன்ராஜ், கோலிசோடா ஐஸ்வர்யா நடிக்கின்றனர். எஸ்.சசிகுமார் எழுதி இயக்குகிறார்.

சிவ பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, வித்யா ஷரண் இசை அமைக்கிறார். எம்.மாணிக்கம், எம்.மதிவாணன் பாடல்கள் எழுதுகின்றனர். சென்னை மற்றும் திருச்சியில் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சென்னையிலுள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வெளியிடப்பட்டது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.

The post இங்கு மிருகங்கள் வாழும் இடம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : J.Ajara Begum ,Bainjan Pictures ,Pollachi ,Bainjan ,Asmita ,Sridevi Unni Krishnan ,Cheranraj ,Golisoda Aishwarya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல்...