×
Saravana Stores

வேளாண் பல்கலை. உழவர் தின கண்காட்சியில் டிராக்டரால் இயங்கும் கரும்பு கரணை நடவு இயந்திரம்

கோவை, செப். 28: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா நான்கு நாட்களுக்கு நடக்கிறது. விவசாய பணிகளுக்கு வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ள நிலையில், விவசாயிகள் அதிகளவில் இயந்திரங்களை பயன்படுத்த முன்வந்துள்ளனர். இதனால், புதிய இயந்திரங்களை கண்டறியும் பணிகளில் வேளாண் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உழவர் தின விழாவில் பல்வேறு புதிய இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதில், கிழக்கு பண்ணையில் டிராக்டரால் இயங்கும் கரும்பு கரணை நடவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இது 35-55 குதிரைத்திறன் கொண்டது. நாளொன்றுக்கு 3.5 எக்டர் பரப்பில் 5 அடி வரிசை இடைவெளியில் நடவு செய்ய முடியும். இந்த டிராக்டர் விலை ரூ.1.50 லட்சம் ஆகும். இந்த கரும்பு கரணை நடவு இயந்திரம் சால் அமைத்தல், கரும்பு கரணைகள் வெட்டுதல், அடிஉரம் இடுதல், பூச்சுக்கொல்லி இட்டு மூடுதல் போன்ற பணிகளை ஒரே நேரத்தில் செய்கிறது.

இந்த இயந்திரத்தை இயக்க டிராக்டர் ஓட்டுவதற்கு ஒருவர், கரும்பை எடுத்து இயந்திரத்தில் செலுத்த 2 பேர் என மொத்தம் 3 வேலையாட்கள் போதுமானது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும், இந்த இயந்திரத்தின் மூலமாக 3,4 அல்லது 5 அடி இடைவெளியில் இரண்டு வரிசையில் கரும்புக்கரணைகளை நடவு செய்யலாம். இது விவசாயிகளை கவர்ந்த நிலையில், பெண்களுக்கான மேம்படுத்தப்பட்ட நிலக்கடலைக்காய் பிரித்தெடுக்கும் கருவி இடம் பெற்றிருந்தது. இதன் மூலமாக அதிகபட்ச நிலக்கடலை காய் பிரிதெடுக்க முடியும். நிலக்கடலை காய்களுக்கு ஏற்படும் சேதாரம் குறைகிறது.

வழக்கமாக கையால் காய்களை பிரித்தெடுக்கும் முறையுடன் ஒப்பிடுகையில், 36 மற்றும் 75 சதவீதம் செலவு மற்றும் நேரம் மீதமாகிறது. 4 பெண்கள் நீண்ட நேரம் சோர்வின்றி இயக்க முடியும். இந்த கருவியின் விலை ரூ.50 ஆயிரம் ஆகும். 4 வேலையாட்கள் மூலமாக நாளொன்றுக்கு 300 கிலோ காய்களை பிரித்து எடுக்க முடியும். இதே போல் மேம்படுத்தப்பட்ட நேரடி நெல் விதைக்கும் கருவி, என்ஜின் மூலம் இயங்கும் நேரடி நெல்விதைப்பு கருவி போன்றவையும் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான செயல்விளக்கம் அளித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் விளக்கமும் அளித்து வருகின்றனர்.

The post வேளாண் பல்கலை. உழவர் தின கண்காட்சியில் டிராக்டரால் இயங்கும் கரும்பு கரணை நடவு இயந்திரம் appeared first on Dinakaran.

Tags : Agricultural University ,Farmer's Day Exhibition ,COVE ,STATE-WIDE GIANT FARMER'S DAY FESTIVAL ,NADU ,KOWAI ,Dinakaran ,
× RELATED பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு