- பொதுக் கல்வி இயக்குநரகம்
- சென்னை
- சென்னை பிரஸ் ஃபோரம்
- மக்கள் கல்வி இயக்குநரகம்
- அரசு
- பச்சையப்பன் கல்லூரி
- தின மலர்
சென்னை: மக்கள் கல்வி இயக்ககம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேராசிரியர் அரசு கூறியதாவது: பல கல்வி நிறுவனங்களில் பல்கலைக்கழக விதிமுறையை பின்பற்றாமல் ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் நியமித்து வருகின்றனர். ஏற்கனவே பச்சையப்பன் கல்லூரியில் 234 காலி பணியிடங்களுக்கு பணம் பெற்று தவறான நபர்களை தேர்வு செய்தனர். இதனால் சென்னை உயர் நீதிமன்றம் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு தலைவராக நீதிபதி பார்த்திபன் மற்றும் செயலாளர் துரைக்கண்ணு ஆகியோரை நியமித்தனர்.
தற்போது அதில், 134 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு வகைகளில் உயர் கல்வி துறை பேராசிரியர்கள் இடையூறுகளை அளித்து வருகின்றனர். தனியார் நிறுவனங்களில் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு ஆசிரியர் வேலையை வழங்குவது மிகவும் கொடுமையாக உள்ளது. ஓராண்டுக்கு மேலாக என்று காலி பணியிடங்களை நிரப்ப போராடி வருகிறோம். எப்படியும் பச்சையப்பன் கல்லூரியில் இருக்கும் இந்த 132 பணியிடங்களை தேர்வு செய்த பின்னரும், இந்த அதிகாரிகள் அங்கீகரிக்கப் போவதில்லை. நாங்கள் வழக்காடு மன்றத்தில் போராடி அவர்களுக்கு வேலைகளை நேர்மையாக வாங்கித் தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post பல கல்வி நிறுவனங்களில் பல்கலை விதியை பின்பற்றாமல் பேராசிரியர்கள் நியமனம்: மக்கள் கல்வி இயக்ககம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.