×

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை: ஒன்றிய, மாநில அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு காரண கர்த்தாக்கள் யார்? அவர்கள் மீது சட்டத்தின் இரும்பு பிடி நீளாமல், சிறுசிறு கடத்தல் வேலை செய்யும் ஒரு சிலரை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடிக்கும் மர்மம் என்ன? தொடர்ந்து இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்ந்தால், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே பாழாகும் என்பதை நினைவில் நிறுத்தி போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட ஒன்றிய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை: ஒன்றிய, மாநில அரசுக்கு எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : EU, STATE GOVERNMENT ,Chennai ,Central Revenue Intelligence Unit ,EU ,State ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!