- ஷ்ரேயாம்ஸ் குமார்
- ஐஎன்எஸ்
- புது தில்லி
- 85வது ஆண்டு பொதுக்கூட்டம்
- இந்திய பத்திரிகை சங்கம்
- தில்லி
- எம்.வி.ஷ்ரேயாம்ஸ் குமார்
- மாத்ருபூமி
- சன்மார்க்
- விவேக் குப்தா
- துணை ஜனாதிபதி
- தின மலர்
புதுடெல்லி: இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் (ஐஎன்எஸ்), 85வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. இதில், 2024-25 ஆண்டுக்கான ஐஎன்எஸ் தலைவராக, மாத்ருபூமியின் எம்.வி.ஷ்ரேயம்ஸ் குமார் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக சன்மார்க்கின் விவேக் குப்தா, உதவித் தலைவராக லோக்மத்தின் கரண் ராஜேந்திர தர்டா, கவுரவப் பொருளாளராக அமர் உஜாலாவின் டான்மே மகேஸ்வரி, பொது செயலாளராக மேரி பால் தேர்வாகினர்.
இதில், தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினத்தந்தி குழும தலைவர் எஸ்.பாலசுப்பிரமணிய ஆதித்தன், தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதி , ஹெல்த் அண்ட் தி ஆன்டிசெப்டிக் ஆசிரியர் எல்.ஆதிமூலம் மற்றும் பல்வேறு முன்னணி பத்திரிகைகளின் நிர்வாகிகள் , ஆசிரியர்கள், 41 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.
The post ஐஎன்எஸ் தலைவராக ஷ்ரேயம்ஸ் குமார் தேர்வு appeared first on Dinakaran.