×

தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு சாம்சங் அழைப்பு!!

சென்னை: சாம்சங் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண சுமூக பேச்சுவார்த்தைக்கு உடன்படக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சாம்சங் நிறுவன தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆனந்த் கோபாலன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அப்போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை இன்றி பணிக்கு அனுமதிப்போம் என அவர் கூறினார். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும். சாம்சங் தொழிலாளர்கள் செப் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு சாம்சங் அழைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Samsung ,CHENNAI ,SAMSUNG CORPORATE ,ANAND GOBALAN ,SUMOGA ,Dinakaran ,
× RELATED சாம்சங் தொழிலாளர் சங்க பதிவு : பதிவுத்துறைக்கு ஆணை