×
Saravana Stores

இரண்டாம் சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகள் அடுக்கும் பணி நிறைவு: சுற்றுலா பயணிகள் பார்வையிட இன்று முதல் அனுமதி

ஊட்டி, செப். 27: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மாடங்களில் மலர் தொட்டிகள் அடுக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று (27ம் தேதி) முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளனர்.  ஆண்டு தோறும் இரண்டாம் சீசன் செப்டம்பர் மாதம் துவங்கி இரு மாதங்கள் நடக்கும். இரண்டாம் சீசன் போது வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டு தோறும் தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதல் சீசன் போது, 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் ெதாட்டிகள் மலர் அலங்காரங்கள் மேற்க்கொள்ளப்படும். இரண்டாம் சீசன் போது, 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்படும்.

இம்முறையும் 15 ஆயிரம் தொட்டிகளில் மேரி கோல்டு, பேன்சி, டெய்சி, டேலியா, சால்வியா உட்பட பல்வேறு மலர் செடிகள் அதிகளவு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர பல்வேறு அலங்கார செடிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.  பொதுவாக செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொட்டிகள் மாடங்களில் அடுக்கப்படும். மேலும், பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். இம்முறை கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்ததால், மலர்கள் பூப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஊட்டியில் வெயில் அடித்து வரும் நிலையில், தற்போது அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாடத்தில் தொட்டிகள் அடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மலர் தொட்டிகள் கொண்டு அலங்காரம் செய்யும் பணிகள் முடிந்த நிலையில், இன்று (27ம் தேதி) முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இத்தாலியன் பூங்காவிலும், மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காாரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், புல் மைதானங்களில் மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

The post இரண்டாம் சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகள் அடுக்கும் பணி நிறைவு: சுற்றுலா பயணிகள் பார்வையிட இன்று முதல் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Ooty Botanic Garden ,Ooty ,Government ,Botanical Gardens ,Ooty Botanical Garden ,Dinakaran ,
× RELATED உருளைக்கிழங்கு பயிர் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்