×

மருதமலை கோயிலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்

தொண்டாமுத்தூர்: கோவை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மலைப்பாதையில் கார் உள்பட 4 சக்கர வாகனங்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்ல அறங்காவலர் குழு சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி, காலை 6 முதல் மதியம் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும், மதியம் 1 முதல் மாலை 6 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும் என நாள் ஒன்றுக்கு 300 நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.

இ-பாஸ் நடைமுறையில் ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் கோயில் அலுவலகத்துக்கு தபால் அல்லது இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

The post மருதமலை கோயிலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : Marudamalai Temple ,Thondamuthur ,Board of Trustees ,Marudamalai Subramaniya Swami Temple ,Goa ,Marudhamalai Temple ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டு கோர்ட்...