தொண்டாமுத்தூர்: கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் அடுத்த சோமையம்பாளையம் ஊராட்சியில் செலவுச் சீட்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது சுகாதார பணிகள் மற்றும் குப்பை அகற்றும் வகையில் விதிமுறைகளை மீறி செலவினம் மேற்கொண்டதும், கொரோனா காலகட்டத்தில் சுகாதார பொருட்கள் மற்றும் பிளீச்சிங் பவுடர் செலவினத் தொகை அரசு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதும் தெரியவந்தது. மேலும் பல்வேறு ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட் உத்தரவுப்படி ஊராட்சி தலைவர் ரங்கராஜை பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
The post ஊழல் குற்றச்சாட்டு கோர்ட் உத்தரவுப்படி அதிமுக ஊராட்சி தலைவர் பதவி நீக்கம் appeared first on Dinakaran.