×
Saravana Stores

கோட்டூர் ஒன்றியத்தில் ரூ3.65 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு

மன்னார்குடி, செப். 26: கோட்டூர் ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். எளவனூர் – சோத்திரியம் இணைப்பு சாலை, முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் உள்ளிட்ட கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ 3.65 கோடியில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாரு நேற்று நேரில் ஆய்வுசெய்தார். கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட ராதாநரசிம்மபுரம் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடத்தினையும், ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியினையும், ராதாநரசிம்மபுரம் ஊராட்சியில் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் கலைஞர் கனவு இல்லம் இடத்தினையும், பாலையக் கோட்டை ஊராட்சியில் ரூ.27.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியினையும் மாவட்ட கலெக்டர் சாரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எளவனூர் ஊராட்சியில் நபார்டு மேம்பாடு திட்டத்தின்கீழ் ரூ.1. 23 கோடி மதிப்பீட்டில் எளவனூர் – சோத்திரியம் இணைக்கும் சாலை அமைக்கப் பட்டுள்ளதையும், எளவனூர் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின்கீழ் ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் சோத்திரியம் கிராம சாலை அமைக்கப் பட்டுள்ளதையும், பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1. லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினையும் பார்வையிட்டார். இதேபோல் பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் ஆவுடைதேவன்குளம் கிராமத்தில் ரூ.7.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினையும், பெருக வாழ்ந்தான் ஊரா ட் சியில் ரூ.55 ஆயிரம் மதிப்பீட்டில் ஊரக வீடு பழுது நீக்கம் செய்யப்பட்டு வருவதையும், பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, மாவட்ட கவுன்சிலர் கலைவாணி மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், பால சுப்பிரமணியன், மன்னார்குடி வட்டாச்சியர் கார்த்திக், உதவிபொறியாளர் மோகன், மேற்பார்வையாளர் செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post கோட்டூர் ஒன்றியத்தில் ரூ3.65 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kotur Union ,Mannargudi ,Kottoor Union ,Elavanur ,Chotriyam Link Road ,Dinakaran ,
× RELATED ‘மைனிங்’ முறையில் தரம்பிரித்து மட்கும் கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பு