×
Saravana Stores

தில்லைவிளாகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் டிஜிட்டல் சர்வே வேளாண் மாணவர்கள் பங்கேற்பு

 

முத்துப்பேட்டை,நவ.16: திருவரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தில் கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவ, மாணவிகளுடன் இணைந்து வேளாண் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, விதை உற்பத்தி மற்றும் அங்கக சான்றுத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகள் ஒன்றிணைந்து நேற்று டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் மும்மரமாக நடைபெற்றது.

இதற்கு, தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் தலைமை வகித்து கூறுகையில், முத்துப்பேட்டை வட்டாரத்தில் இரண்டாம் கட்டமாக முத்துப்பேட்டை வட்டார கிராமங்களில் தற்பொழுது டிஜிட்டல் பயிர் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. இதில், நேற்று தில்லைவிளாகம் கழுவன்காடு, உப்பூர், உதயமார்த்தாண்டபுரம், விலவங்காடு மற்றும் தோலி ஆகிய பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களும் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை அலுவலர்களும் விதை உற்பத்தி மற்றும் அங்கக சான்று துறை அலுவலர்களும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களும் கிராம வாரியாக சென்று கல்லூரி மாணவ மாணவிகளுடன் டிஜிட்டல் வேளாண் பயிர்கள் சர்வே செய்யும் பணி நேற்று மும்மரமாக நடந்தது.

தில்லைவிளாகம் கிராமத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் கீழ்வேளுர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் நாராயணன், வேளாண்மை அலுவலர் திவ்யா, தோட்டக்கலை அலுவலர் சூரியா, உதவி வேளாண் பொறியாளர் ஆர்த்தி, துணை வேளாண்மை அலுவலர் கண்ணன் கலந்துகொண்டனர்.

The post தில்லைவிளாகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் டிஜிட்டல் சர்வே வேளாண் மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Department of Agriculture ,Thillavilakam ,Muthuppet ,Thillavilagam ,Thiruvarur District ,Muthupet ,Kilvellur Agricultural College ,Research Institute ,Agriculture Farmer Welfare Department ,Horticulture Department ,Seed Production ,Organic Certification Department ,Engineering ,Dinakaran ,
× RELATED ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்...