- யூனியன்
- புது தில்லி
- சுகாதாரத்திற்கான மத்திய அமைச்சர்
- அனுப்ரியா படேல்
- ஐக்கிய நாடுகள்…
- மத்திய அமைச்சர்
- தின மலர்
புதுடெல்லி: கடந்த 2010ம் ஆண்டில் இருந்து புதிதாக எச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 44 சதவீதம் குறைந்துள்ளதாக ஒன்றிய சுகாதார துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் எய்ட்ஸ் நோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மறுபரிசீலனை செய்தல் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ஒன்றிய சுகாதார துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2030ம் ஆண்டுக்குள் எச்ஐவி/ எய்ட்ஸ் நோயை பொது சுகாதார அச்சுறுத்தலாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கை அடைய இந்தியா முயற்சித்து வருகிறது. 2023ம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியாவில் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் எச்ஐவியுடன் வாழ்கின்றனர். ஒராண்டில் சுமார் 66400 பேர் எச்ஐவியால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆண்டு புதிய எச்ஐவி தொற்று பாதிப்பு 44 சதவீதம் குறைந்துள்ளது. இது உலகளாவிய குறைப்பு விதிதமான 39சதவீதத்தை விட அதிகமாகும் என்று அவர் தெரிவித்தார்.
The post 2010ம் ஆண்டில் இருந்து எச்ஐவி பாதிப்பு 44% குறைந்துள்ளது: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.