- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பெரம்பலூர்
- வனத்துறை?: பொது
- பெரம்பலூர் அரசு
- பெண்கள் உயர்
- பள்ளி
- பசுமைத் தமிழர் நாள்
- பசுமைத் தமிழர்
*பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர் : பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வனத் துறையின் சார்பில், பசுமை தமிழ்நாடு நாளினை முன்னிட்டு 1000 மரக் கன்றுகள் நடும் பணிகளுக்கான தொடக்க விழா நேற்று (24ம்தேதி) நடைபெற்றது.
விழாவில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மேலும், மாணவ மாணவிகளுக்கும் மரக்கன்று நட்டு வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்பாக வளர்க்கும் எண்ணத்தை ஊக்கு விக்கும் வகையிலும் அப்பள்ளியில் பயின்ற மாணவிகைளையும் மரக் கன்று நட்டு வைக்க மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தியதன் அடிப் படையில், மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு ”பசுமை தமிழ்நாடு” என்ற இயக்கத்தினை 2022 ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி தொடங்கி வைத்தார். இதனால் இந்நாளினை பசுமை தமிழ்நாடு தினமாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுச்சூழலை பேணி காத்திடும் விதமாக பசுமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கொண்டா டப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 1,000 மரக் கன்றுகளை நட திட்டமிடப் பட்டு, நேற்று பெரம்பலூர் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் மரக் கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், எசனை, அம்மாபாளையம், ஒதியம், குரும்பலூர், ஆலம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளிலும், பெரம்பலூர் அரசு பாலி டெக்னிக் கல்லூரி, தொண்டபாடி மாரியம்மன் கோவில் அருகில் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட வனத் துறையின் சார்பில் புங்கன், வேம்பு, மகோகனி, பாதாம், நீர்மருது உள்ளிட்ட பல்வேறு வகையான 1000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் பெரம்பலூர் ஒன்றியக் குழுத் தலைவர் மீனா அண்ணாதுரை, நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், வனச்சரகர்கள் (பெரம்பலூர்) பழனிக் குமார், (வேப்பந்தட்டை) சுதாகர் மற்றும் பள்ளியின் தலைமைஆசிரியை மரகதம் ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பசுமை தமிழ்நாடு நாளை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா appeared first on Dinakaran.