×

தஞ்சை மாநகராட்சிக்கு ரூ.12 கோடி குத்தகை நிலுவையால் நட்சத்திர ஓட்டலுக்கு சீல் வைப்பு: கலெக்டர் அதிரடி

தஞ்சை: தஞ்சையில் அனுமதியின்றி குத்தகை உரிமம் வேறு ஒருவருக்கு மாற்றம் செய்யப்பட்டது மற்றும் மாநகராட்சிக்கு ரூ.12கோடி குத்தகை நிலுவை காரணமாக நட்சத்திர ஓட்டலுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. தஞ்சையில் கடந்த 1994ல் 8வது உலக தமிழ் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது தஞ்சையில் போதுமான நட்சத்திர ஓட்டல் இல்லாத காரணத்தால் மாவட்ட நிர்வாகம் சார்பாக தனியார் விடுதிகள் கட்டுவதற்கு சலுகைகள் வழங்கப்பட்டன.இதற்காக தஞ்சை மணிமண்டபம் அருகே 1 ஏக்கர் 6,160 சதுர அடியில் இருந்த அரசு நிலத்தை 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நட்சத்தில் ஓட்டல் கட்ட கடந்த 1994 ஜூன் 7ல் செல்வராஜ் என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. டெம்பிள் டவர் என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு அனுமதியின்றி அந்த ஒப்பந்தத்தை வெங்கடாசலம் என்பவருக்கு செல்வராஜ் மாற்றியுள்ளார். மேலும் ரூ.12 கோடி குத்தகை நிலுவை தொகையும் இருந்தது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகள் நட்சத்திர ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நிலுவைத்தொகை செலுத்தப்படவில்லை. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2016ல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த இடத்தை ஒப்படைக்குமாறு வருவாய்துறை மற்றும் நீதிமன்றம் மூலம் கடந்த 2019ல் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் நட்சத்திர ஓட்டல் நிர்வாகம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.இந்நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர்.அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் கலெக்டர் முன்னிலையில் ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சபா இடத்தை மதுபான கூடமாக மாற்றி தஞ்சை மாநகராட்சிக்கு  ரூ.19.14கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்திய சகோதரர்கள் 4பேர் மீது போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது….

The post தஞ்சை மாநகராட்சிக்கு ரூ.12 கோடி குத்தகை நிலுவையால் நட்சத்திர ஓட்டலுக்கு சீல் வைப்பு: கலெக்டர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Thanjam Corporation ,Thanjana ,Star Citel ,Thanjai Corporation ,Dinakaran ,
× RELATED 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!