×

அணைக்கட்டு அருகே காட்டுப் பகுதியில் உணவின்றி தவிக்கும் பார்வையற்ற ஆண்- பெண் தோழர்கள்: முகாமில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க கோரிக்கை

அணைக்கட்டு: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலை கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (38). பிறவியிலிருந்தே பார்வையில்லாத இவர், வேலூரில் உள்ள தனியார் இசை கச்சேரியில் வாத்தியங்கள் வாசித்து வந்துள்ளார். இதே குழுவில் வேலை செய்த அவரை போன்ற பார்வையற்ற புவனா(32) என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நண்பர்களாகி விட்ட இவர்கள், கொரோனா ஊரடங்கு போன்ற பல்வேறு காரணங்களால் இசை நிகழ்ச்சிகள் நடக்காததால் வேலை கிடைக்காமல் தவித்தனர். இந்நிலையில் அவர்களை அங்கு கவனித்து வந்த சிலர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டு பகுதியில் விட்டு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வரதலம்பட்டு பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள தகர சீட்டில் பம்பு செட் போன்று அமைக்கப்பட்டுள்ள சிறிய அறையில் வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் கால்கள் அடிபட்டிருப்பதால் எழுந்து நடக்கவும் பிறரிடம் உதவிகள் கேட்கவும் வழியின்றி தவித்து வருகின்றனர். சாப்பாடு கூட கிடைக்காமல் அவர்கள் அருகே கிடைக்கும் தண்ணீரை குடித்து வாழ்ந்துள்ளனர். இதனை காட்டில் ஆடுகள் மேய்க்க செல்லும் சிலர் பார்த்து ஊர் மக்களுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 3 மாதமாக வரதலம்பட்டு கிராம மக்கள் அவர்களுக்கு  உணவு வழங்கி வருகின்றனர். அவர்களிடம் கிராம மக்கள் பேசியபோது ரமேஷின் உடன் பிறந்த தம்பி இருவரையும் இந்த காட்டிற்கு அழைத்து வந்து விட்டு சென்றதும், உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வந்ததும் தெரியவந்தது. கண்கள் தெரியாத நிலையில் கால்களில் அடிபட்டு காயங்களுடன் தவிக்கும் இவர்களை மீட்டு முகாமில் தங்க வைக்கவும், உதவி தொகை கிடைக்கவும்  அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க  கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post அணைக்கட்டு அருகே காட்டுப் பகுதியில் உணவின்றி தவிக்கும் பார்வையற்ற ஆண்- பெண் தோழர்கள்: முகாமில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aamkatu ,Ramesh ,Alleri Hill ,Aamkatu taluk, Vellore district ,Dinakaran ,
× RELATED அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றால்...