×

கரூர் விளையாட்டு மைதான சாலையில் கூடுதல் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை

 

கரூர், செப். 25: கரூர் மாவட்ட விளையாட்டு மைதானம் செல்லும் சாலையில் கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கருர் தாந்தோணிமலை சாலையில் மாவட்ட விளையாட்டு மைதானம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் தற்போதைய நிலையில் அதிகளவு குடியிருப்புகள் உருவாகியுள்ளன.

இந்த சாலை வழியாக பொன்நகர், பாரதிதாசன் நகர், அருகம்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வோர் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த சாலையில் கூடுதல் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏழுந்துள்ளது.

The post கரூர் விளையாட்டு மைதான சாலையில் கூடுதல் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur Sports Ground Road ,Karur ,Karur district ,Karur Thanthonimalai road ,Karur Playground Road ,Dinakaran ,
× RELATED பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது