×

கல்லூரி மாணவி மாயம்

தேன்கனிக்கோட்டை, செப்.25: உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வசிப்பவர் மஞ்சுநாத் (43). இவரது 17 வயது மகள், ராயக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காதால், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், கூடுமாக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார்(19) என்ற வாலிபர் மீது சந்தேகம் உள்ளது என புகாரில் தெரிவித்துள்ளார்.

The post கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Dhenkanikottai ,Manjunath ,Anjaneyar Koil Street, Uthanapalli ,Rayakottai ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்