- காந்தி
- மதுரை
- மதுரை நீதிமன்றம்
- மகாத்மா காந்தி
- காந்தி அருங்காட்சியகம்
- பாரதிய பிரஜா ஜாக்யா கட்சி
- மாநில செயலாளர்
- வேல்முருகன்
- நகரம்
- பொலிஸ் ஆணையாளர்
மதுரை: மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவருக்கு முன்ஜாமீன் வழங்கிய மதுரை நீதிமன்றம், காந்தி அருங்காட்சியக நூலகத்தில் நூல்களை அடுக்கி நூலகருக்கு உதவ உத்தரவிட்டுள்ளது. பாரதிய பிரஜா ஜக்கிய கட்சி மாநில செயலாளர் வேல்முருகன், மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், ‘‘கல்யாணசுந்தரம் என்ற பெயரில் பேஸ்புக்கில் மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கல்யாணசுந்தரம் மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.சிவகடாட்சம் ‘‘30 நாள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள நூலகத்தில், நூலகருக்கு உதவியாக இருந்து புத்தகங்களை அடுக்கும் பணியை 15 நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டும்’’ என உத்தரவிட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளார்.
The post காந்தி குறித்து அவதூறு 15 நாட்கள் நூல்களை அடுக்க தண்டனை appeared first on Dinakaran.