- தர்மம்
- வடக்கு
- வட மாநிலம்
- ஹுண்டேன் மோசடி
- செய்
- திருவண்ணாமலை மாவட்டம்
- தலுகா சகாயபுரம் மாரியம்மன் கோயில் தெரு ராமதாஸ்
- 34
- என்.டி
செய்யாறு: செய்யாறு அருகே வெள்ளி கொலுசுகளுக்கு பாலீஷ் போடுவதாக கூறி 2 பெண்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா சகாயபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்(34), ஜேசிபி டிரைவர். இவரது மனைவி சசிகலா. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர், நகை பாலீஷ் போடுவதாக கூறியுள்ளனர். அவர்களிடம் சசிகலா தனது காலில் இருந்த வெள்ளி கொலுசை கொடுத்துள்ளார்.
பாலீஷ் போட்டு கொலுசை திருப்பி கொடுத்துவிட்டு அதற்கான கூலி ரூ.20 பெற்றுக்கொண்டு சென்று விட்டனர். நேற்று காலை அப்பகுதிக்கு வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரும், மாரியம்மன் கோயில் அருகில் உள்ள ராஜாவின் மனைவி முத்துமாரியிடம் கொலுசுகளை வாங்கி பாலீஷ் போட்டுவிட்டு கூலியாக ரூ.20 பெற்றுக்கொண்டனர். கொலுசை வாங்கி பார்த்த முத்துமாரி, அதில் மிகவும் எடை குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சந்தேகம் அடைந்த அவர் அப்பகுதி மக்கள் உதவியுடன் 2 வாலிபர்களையும் பிடித்து வைத்துக்கொண்டு மோரணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். அவர்கள் பீகார் மாநிலம், சார்ஷா ஜில்லா பிஜில்பூர் பகுதியை சேர்ந்த விப்பட்குமார்(35), ராஜுவ்குமார்(29) என்பதும், இவர்கள் 2 பேரும் முத்துமாரியின் வெள்ளி கொலுசுகளை பாலீஷ் போடுவதாக கூறி சுமார் 100 கிராம் அளவுக்கு மேல் வெள்ளியை உரசி திருடியதும், அதேபோல் சசிகலாவின் கொலுசில் வெள்ளியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post செய்யாறு அருகே வெள்ளி கொலுசுகளுக்கு பாலீஷ் போட்டு பெண்களிடம் நூதன மோசடி: வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.