- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- வெள்ளை
- அமைச்சர்
- தி.R.P.Raja
- முதல்வர்
- ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: வெளிநாடு பயணம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கைதான். தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் கட்சி நிகழ்ச்சிகளில் பேசி வந்தனர். ஆனாலும் இதுவரை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், தமிழக அமைச்சரவையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், தமிழக முதல்வரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வந்தார். பின்னர் அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறதா?
பதில்: எல்லாம் தயாராகவே உள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் அனைத்து கலெக்டர்களிடமும் பேசி உள்ளார். நானும் 2 நாளில் கலெக்டர்கள், உயர் அதிகாரிகளை அழைத்து பேச உள்ளேன். கொளத்தூர் தொகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டது பற்றி?
பதில்: இது எப்போதும் என்னுடைய சொந்த தொகுதி. எங்க வீட்டு பிள்ளை மாதிரி பார்க்கிற தொகுதி இது. அதனால் எப்போதும் இங்கு வந்துகிட்டு இருப்பேன். நினைத்த நேரத்தில் வருவேன். வெளிநாடு சுற்றுப்பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்களே?
பதில்: அவர்களுடைய வெள்ளை அறிக்கை எந்த அளவுக்கு இருந்தது என்று உங்களுக்கு தெரியும். இது ஏமாற்றுகிற திட்டம் இல்லை. ஏமாற்றுகிற நிதி ஒதுக்கீடும் இல்லை. தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெளிவாக பதில் கொடுத்திருக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடு பயணம் குறித்து டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கைதான். ரொம்ப நாட்களாகவே அமைச்சரவை மாற்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக செய்திகள் வருகிறது. நீங்களும், சொன்னதைத்தான் செய்வோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு உங்கள் பதில்?
பதில்: ஏமாற்றம் இருக்காது… மாற்றம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் வில்சன், கலாநிதி விராசாமி, கிரிராஜன், துணை மேயர் மகேஷ்குமார், மண்டல குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்பட பலர் இருந்தனர்.
* வௌிநாட்டு முதலீடு ஏமாற்றுகிற திட்டம் இல்லை; ஏமாற்றுகிற நிதி ஒதுக்கீடும் இல்லை.
* தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெளிவாக பதில் கொடுத்திருக்கிறார்.
* அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடு பயணம் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கைதான்.
The post ‘மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது’ அமைச்சரவையில் மாற்றம் நிச்சயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.