×
Saravana Stores

சென்னை கீழ்கட்டளையில் உள்ள ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதிரடியாக உயர்ந்த பருவக்கட்டணம்: பெற்றோர்கள் போராட்டம்

சென்னை: சென்னை கீழ்கட்டளையில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் இரண்டாம் பருவம் கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. திடீரென உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த உயர்வை கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கீழ்கட்டளையில் இயங்கி வரும் ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் பருவக்கட்டணம் திடீரென மூன்று மடங்கு உயர்த்தி அதற்கான வங்கி சலான் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோரிடம் கட்டணம் செலுத்த வலியுத்தியுள்ளனர்.

இந்த கட்டணம் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் காலை 9 மணி முதல் தற்போது பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மடிப்பாக்கம் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், மற்றும் மகளிர் போலீசார் ஆகியோர் பள்ளி முப்பு குவிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தில் பள்ளியின் நிர்வாகத்திற்கும் பெற்றோர்களுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளி நிர்வாகமே வெளிய அனுப்பியது. இதனையடுத்து அங்கு அதிமாக வாக்குவாதம் நடைபெற்றது.

இறுதியாக உடன்பாடு ஏற்படவில்லை அதன்பின்பு பள்ளி நிர்வாகம் கட்டணம் உயர்வு பற்றி மறுபரிசீலனை செய்து 10 நாட்களுக்கு பிறகு பெற்றோருடன் பள்ளி நிர்வாகம் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கல்வி கட்டணம் உயர்த்தியதற்க்கு பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு பதிலும் இல்லை. தபோது மாணவர்களை அழைத்து செல்லும் பணியில் உள்ளோம் என்று பள்ளி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

The post சென்னை கீழ்கட்டளையில் உள்ள ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதிரடியாக உயர்ந்த பருவக்கட்டணம்: பெற்றோர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Holy Family Convent Matriculation School ,Kilikatala, Chennai ,CHENNAI ,Command ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது