×
Saravana Stores

விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

 

கீழக்கரை, செப்.24: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தேர்வான திருப்புல்லாணி வட்டாரம் பத்ரதரவை கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. காண்டாமிருக வண்டு தாக்குதலுக்கு அதிகம் பாதித்த தென்னை மரங்களில் ஒளிச்சேர்க்கை, விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேப்பங்கொட்டைத்தூள், மணலை 1:2 விகிதத்தில் கலந்து மட்டைகளுக்கு அடியில் வைக்கலாம்.

இரவு வேளையில் விளக்கு பொறி வைப்பதால் வண்டுகள் கவர்ந்திழுக்கலாம் என ராமநாதபுரம் விவசாய மைய மரபு வழி வளர் தாவரவியல் துறை இணை பேராசிரியர் முத்துராமு பேசினார். தென்னையின் உரம் மேலாண் குறித்து உதவி தோட்டக்கலை அலுவலர் ஆஸ்திகா,கொப்பரை கொள்முதல் குறித்து உதவி வேளாண் அலுவலர் திருதுவநேசன், தென்னையின் நன்மைகள் குறித்து உதவி வேளாண் அலுவலர் முனியசாமி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

The post விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers Coordination Committee ,Geezalkarai ,Bhadradharavai ,Thirupullani district ,Farmers Coordinating Committee ,Dinakaran ,
× RELATED சம்பா பருவ பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்ய நவ.15 கடைசி